Enable Javscript for better performance
காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்க வேண்டும். உணவு மானியமாக ரூ. 5 வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வி.சி. குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜசேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன், மாவட்டச் செயலர் வி. சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai