சுடச்சுட

  

  காவல்துறையின் அவசர உதவி எண்ணுக்கு வந்த 7,380 அழைப்புகள் மீது நடவடிக்கை

  By DIN  |   Published on : 05th June 2018 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில், காவல்துறையின் அவசர உதவி எண்ணுக்கு இதுவரை வந்த 7,380 அழைப்புகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  பொது இடங்களில் பிரச்னை, பொதுமக்களிடம் பிரச்னை, பெண்களை கேலி கிண்டல் செய்தல், போக்கிரித்தனம், போக்குவரத்துக்கு இடையூறு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின் போது பொதுமக்கள் மாவட்ட காவல் துறையை உதவிக்கு அழைக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஹலோ போலீஸ் 8300087700 என்ற செல்லிடப்பேசி எண் 24 மணி நேர சேவையாக கடந்த 2016 செப்.1 முதல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த எண்ணில் வாட்ஸ் ஆப் வசதியும் கொடுக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இச்சேவை தொடங்கியதிலிருந்து தற்போது வரை மொத்தம் 6,121 அழைப்புகள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
  மேலும், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழக காவல்துறை இலவச அழைப்பு எண் 100-ஐ தொடர்புகொள்ளும் வகையில், தமிழக காவல்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
  108 ஆம்புலன்ஸை அழைப்பது போல் பொதுமக்கள் அவசர உதவிக்கு 100-ஐ தொடர்பு கொண்டால், மாநிலக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் பெறப்பட்டு, மாவட்டக் காவல் துறையில் இயங்கும் நவீன கட்டுப்பாட்டு அறை மூலம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு இருசக்கர வாகன ரோந்து காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வசதி திருவாரூர் மாவட்டத்தில் 2018 ஜன.18-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
  இந்த இலவச அழைப்பு எண் 100 சேவையில் இதுவரை 1,259 அழைப்புகள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்களை காவல் நிலையங்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கும் விதமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண் 8300087700 மற்றும் அவசர போலீஸ் 100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai