சுடச்சுட

    

    திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவந்த போது, தப்பியோடியவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை சௌந்தரேசுவரர் கோயிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி திருட்டு நடந்தது.
    இதுதொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த மனோகரன் என்பவரை முத்துப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தபோது, நீதிமன்ற வளாகத்திலிருந்து மனோகரன் தப்பிச் சென்றுவிட்டார்.
    அவரை போலீஸார் தேடிவந்த நிலையில், பேராவூரணி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் மனோகரன் பதுங்கி இருப்பதாக முத்துப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார், மனோகரனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai