சுடச்சுட

  

  புகையிலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  By DIN  |   Published on : 05th June 2018 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவ மாணவர்கள் முன்வர வேண்டும் என, திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
  உலகப் புகையிலை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவத் துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அழ. மீனாட்சிசுந்தரம் பேசியது:
  புகைப் பிடிப்பதால் நுரையீரல் மற்றும் இருதய நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும், மூளைப் பாதிப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்பும் ஏற்படலாம். மூக்கு, வாய், உதடு, நாக்கு மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உதடுகளிலும், தோல்களிலும் நிறமாற்றம் ஏற்படும். இந்த புகை என்பது புகைப் பிடிப்பவர்களை மட்டுமல்லாது அருகில் இருப்பவர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
  மருத்துவ மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் இதுதொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த முன் வர வேண்டும் என்றார்.
  புகைப் பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு பற்றி திருச்சி மருத்துவர் செல்வராஜ், நரம்பு மண்டலப் பாதிப்பு குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறை பேராசிரியர் தங்கராஜ், இருதயப் பாதிப்புகள் குறித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதுநிலை உதவி பேராசிரியர் நடராஜ், சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து மருத்துவர் புகழேந்தி ஆகியோர் பேசினர்.
  பின்னர் புகைப் பிடிக்க மாட்டோம், புகையிலையை ஒழிப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
  இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன், துணை முதல்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai