Enable Javscript for better performance
பெண்ணிடமிருந்து 12 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே பெண்ணின் கழுத்திலிருந்து நகையை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவாரூர் அருகேயுள்ள விளமல், தியாகராஜர் நகரைச் சேர்ந்த சங்கர் மனைவி ராஜேஸ்வரி (38). கொரடாச்சேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜேஸ்வரி, ஞாயிற்றுக்கிழமை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜேஸ்வரி அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலூகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai