மக்கள் குறைதீர் கூட்டம்
By DIN | Published on : 05th June 2018 12:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூரில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 139 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஏ. மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.