சுடச்சுட

  

  அகில இந்திய மாதர் சம்மேளனத்தின் 64-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டியில் கொடியேற்றப்பட்டது.
  திருத்துறைப்பூண்டியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாதர் சம்மேள ஒன்றியச் செயலர் குருமணி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர்
  தமயந்தி கொடியேற்றி வைத்து, மாதர் சம்மேளனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
  இதில், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் விஜயா, ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  பெண் சமத்துவம், பெண்ணுரிமை பாதுகாப்பு, பெண்களுக்கான கல்வி உரிமை போன்றவற்றை முன்னெடுத்து செல்லும் வகையில் சுதந்திரப் போராட்ட வீரர் அருணைஆசிப்அலி தலைமையில் கடந்த 1954-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மாதர் சங்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai