Enable Javscript for better performance
அரசு அலுவலர் குறித்த முழுத் தகவல்கள் கணினிமயமாக்கப்படவுள்ளன: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    அரசு அலுவலர் குறித்த முழுத் தகவல்கள் கணினிமயமாக்கப்படவுள்ளன: ஆட்சியர்

    By DIN  |   Published on : 06th June 2018 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு அலுவலர் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் வரையிலான அவரின் தகவல்கள்  முழுமையாக கணினிமயமாக்கப்படவுள்ளன என்றார் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
    திருவாரூர் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில் மாவட்ட  கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட பயிற்சி வகுப்பை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
    இப்பயிற்சி ஜூன்  9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள  மேலாண்மை திட்டத்தில் ஒப்பம்,  விரல்ரேகை பதிவு முறையை உறுதிப்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் நிதி நிலை விவரம் உடனுக்குடன் கிடைப்பதுடன்,  நிதி, மனிதவள மேலாண்மை சிறப்பாக நடைபெற வழி வகுக்கும். இத்திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 18 ஆயிரம் அரசு அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் ஊதியப்பட்டியல்கள் மற்றும் இதரப் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க வழிவகுக்கும். அரசு அலுவலர்களின் பணிப் பதிவேடுகளின் பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல்கள் ஆகியவை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். ஒரு அரசு அலுவலர் அரசுப் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் நாள் வரை அவரது பணி வரலாறு முழுமையாக கணினிமயமாகிறது. இத்திட்டம் திருவாருர் மாவட்டத்தில் அக்டோபர் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நிர்மல்ராஜ். 
    நிகழ்ச்சியில், மாவட்ட கருவூல அலுவலர் ஜி.ஆர். லலிதா, குடவாசல் வட்டாட்சியர் பிருத்விராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai