சுடச்சுட

    

    உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தினத்தையொட்டி, மன்னார்குடியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க மன்னார்குடி கிளை சார்பில், மதுக்கூர்- திருமக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள பின்லே பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் சா. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சங்க பொதுச் செயலர் சா. சம்பத் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
    தொடர்ந்து, நகராட்சிக்குள்பட்ட புறவழிச்சாலை, வண்ணான்குளம், அசேசம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
     இந்நிகழ்ச்சியில், சங்க பொருளாளர் சா. நவநீதகிருஷ்ணன், ஜேசிஐ மன்னார்குடி பவர் அமைப்பின் கிளைத் தலைவர் கே. கண்ணன், செயற்குழு உறுப்பினர் வீரராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
     இதேபோல், மன்னார்குடி கட்டடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில், அப்துல் கலாம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்க கிளைத் தலைவர் அழகானந்தம் தலைமை வகித்தார். மாநிலப் பொறியாளர் கூட்டமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சங்கம் சார்பில் நிகழாண்டில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
     மரங்களை வளர்க்கும் முறை, பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கும், பறவைகளுக்கு பயனளிக்கும் மரங்கள் போன்றவை குறித்து மாநில இயற்கை ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் கலைமணி நிலா, இயற்கை ஆர்வலர் குவாலிட்டி கைலாசம் ஆகியோர் பேசினர். 
    தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. 
    பின்னர், சட்டிருட்டி வாய்கால் கரையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் பொறியாளர் சங்க கிளைச் செயலர் ஜான் மற்றும் நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai