Enable Javscript for better performance
ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்தக் கோரி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்தக் கோரி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 06th June 2018 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் 15-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, மன்னார்குடியில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டத்தில், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களை மூடக்கூடாது, அஞ்சல்துறையை தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக, நகராட்சி அலுவலகம் முன்பிருந்து பேரணி தொடங்கியது. மன்னார்குடி உபக்கோட்ட கிளைச் சங்க செயலர் ஆர். தமிழ்ச்செல்வன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர். இப்பேரணி முக்கிய வீதிகளின் வழியாக மேலராஜவீதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே சென்றடைந்ததும், அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு நகர நிர்வாகி ஜி. ரெகுபதி, ஏஐடியுசி சிறப்புத் தலைவர் ஆர்.ஜி. ரெத்தனக்குமார், பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகி கே. பிச்சைக்கண்ணு, என்எப்பிஇ துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியன், அஞ்சல் ஊழியர் சங்க செயலர் எம். உதயகுமார், பொருளாளர்ஆர். பண்டரிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai