சுடச்சுட

  

  குடவாசல் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகள் பவித்ரா (17), 12-ஆம் வகுப்பு முடித்த நிலையில், வீட்டில் இருந்து வந்தார்.   இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி மகன் மகாதேவன் என்பவரை பவித்ரா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பவித்ராவின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  இதனால் மனமுடைந்த அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பின்புறத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைத்தொடர்ந்து, உடல் கருகிய நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை பவித்ரா உயிரிழந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai