சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட உமாபதீசுவரர் கோயிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட பிரதோஷ நாயகர் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  கூத்தாநல்லூர் பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள வாஸலாம்பிகா சமேத உமாபதீசுவரர் கோயிலில் பிரதோஷ நாயகர் இல்லாமல் இருந்தார். இதனால், பிரதோஷ காலங்களில் உத்ஸவர் இல்லாததால், சுவாமி வீதியுலா நடைபெறாமல் இருந்தது. எனவே குருக்கள் ஜெய்சங்கர் மற்றும் பக்தர்கள், பண்டுதக்குடி கிராமவாசிகள் ஆகியோரது ஏற்பாட்டின்பேரில், புதிதாக பிரதோஷ நாயகரும், அதற்குரிய வாகனமும் வடிவமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
  ரூ.80 ஆயிரம்  மதிப்பீட்டில், கும்பகோணத்தில் பிரதோஷ நாயகரும், உத்ஸவ மூர்த்திகள் அமர கூத்தாநல்லூரில் காளை வாகனமும் வடிவமைக்கப்பட்டன. புதிதாக வடிவமைக்கப்பட்ட பிரதோஷ நாயகர் திங்கள்கிழமை  இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
  முன்னதாக, மூலவர் வாஸலாம்பிகா சமேத உமாபதீசுவரர் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, புதிதாக செய்யப்பட்ட காளை வாகனத்தில், பிரதோஷ நாயகர் கோயிலைச் சுற்றி வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai