சுடச்சுட

  

  சீலையம்பட்டி செங்குளம் தடுப்பணை சீரமைப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி: குளத்தை தூர்வார வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 06th June 2018 06:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சின்னமனூர் அருகேயுள்ள சீலையம்பட்டி செங்குளத்தின் தடுப்பணை சீரமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றிடவும் அவர்கள்  கோரிக்கை விடுத்தனர்.
       சீலையம்பட்டி மற்றும் பூலாநந்தபுரம் இடையே அமைந்துள்ளது செங்குளம். முல்லைப்பெரியாற்றின் பாசன கால்வாய் மூலமாக திறக்கப்படும் நீர் இக்குளத்தில் தேக்கப்படும். இதன் மூலமாக  சீலையம்பட்டி, பூலாநந்தபுரத்தில் பகுதியில் சுமார்  1500 ஏக்கருக்கு மேலாக நெற்பயிர் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படும். 
  மேலும், இப்பகுதியில் பெய்யும் மழைநீரும் இக்குளத்தில் சேர்வதால்   நிலத்தடி நீர்மட்டம்  உயர்ந்து அதிக  அளவில்  விவசாயப்பணிகள் நடைபெற காரணமாக அமைகிறது. 
  சேதமான தடுப்பணை சீரமைப்பு: ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்குளத்தின் தடுப்பணை பல ஆண்டுகளாக  சேதமடைந்து இருந்தது. இதனால் மழை காலத்தில் குளத்திற்கு வரும்  நீர்  வீணாகி வெளியேறியது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல முறை பொதுப்பணித்துறைக்கு  தடுப்பணையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். 
     இந்நிலையில், இந்தாண்டு பருவமழை தீவிரமாக இருக்கும்  என்பதால்  அனைத்து குளம் மற்றும் கண்மாய்களை  சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு  மாவட்ட நிர்வாக உத்தரவிட்டது. அதன்படி சீலையம்பட்டி குளத்தின் தடுப்பணை சீரமைக்கப்பட்டது. அதே போல குளத்தின் கரை பகுதியை ஜே.சி.பி இயந்திரம் மூலாக உயர்த்தி பலப்படுத்தியுள்ளனர். 
    பொதுப்பணித்துறையின் இந்த நடவடிக்கையால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
   தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்: பல ஆண்டுகளாக குளத்தை தூர்வாராத நிலையில் பல அடிக்கு வண்டல் மண் படித்து காணப்படுகிறது. 
   மேலும் குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியைமீட்டு வரும் காலங்களில் குளத்தில் முழுமையாக தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
   இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில், குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றினால் அதிகளவில் தண்ணீர் தேக்கமுடியும். 
  இதன் மூலமாக  கூடுதலாக தண்ணீர் தேங்கினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து  கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு விவசாயம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai