Enable Javscript for better performance
சுதந்திர தின விழா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் விருதுகளுக்கு ஜூன் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2018  சுதந்திர தின விழாவில் மகளிருக்காக சிறப்பாக சேவையாற்றும் சமூக சேவகர்கள் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மகளிருக்காக சிறந்த சேவையாற்றும் அமைப்பு மற்றும் தனி நபர்கள் சேவை செய்த, செய்கின்ற விவரம் மற்றும் சுயவிவரங்களுடன் ஜூன் 8-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலருக்கு  அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-224280 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai