Enable Javscript for better performance
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவாரூர் பனகல் சாலை பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கடை அண்மையில் மூடப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை இந்த கடையை திறக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன்  கடையை  மூடக் கோரி  மாவட்ட  ஆட்சியரிடம்  மனு அளித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai