Enable Javscript for better performance
தலைவர்கள் சிலைக்கு அமமுக நிர்வாகிகள் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள், செவ்வாய்க்கிழமை ஊர்வலமாகச் சென்று, தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    அமமுக மாநில அமைப்புச் செயலராக நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், வழக்குரைஞர் பிரிவு மாநிலத் தலைவராக முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், மாநிலத் தேர்தல் பிரிவு செயலராக க. மலர்வேந்தன், பொதுக்குழு உறுப்பினராக பி.ஜி. பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் மாநில துணைச் செயலர் டி.டி.வி. தினகரன் அண்மையில்
    வெளியிட்டார். 
    இதைத்தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மன்னார்குடி அன்னவாசல் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். காமராஜ் தலைமையில் ஊர்வலமாகச் சென்று, தேரடியில் உள்ள எம்ஜிஆர் சிலை, ருக்மணிபாளையத்தில் உள்ள அண்ணா சிலை மற்றும் மேலராஜவீதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
     இதில், கட்சியின் நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ், ஒன்றியச் செயலர்கள் மன்னார்குடி க. அசோகன், நீடாமங்கலம் எம்.எஸ். சங்கர், தொழிற்சங்க நிர்வாகி கே. ஆசைத்தம்பி, மகளிரணி நிர்வாகி ஜெ. இளவரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai