சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
    கடும் கோடை வெப்பம் காரணமாக அவதிப்பட்ட மக்களுக்கு சற்று குளிர்ந்த காற்றுடன் பெய்த இந்த மழை இதமாக இருந்தது. தொடர்ந்து, இந்த மழை பெய்தால் நிலத்தடி நீர் கிடைக்கவும், குறுவை சாகுபடிக்கு உதவியாகவும் இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், கிராமப்புறங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றவும் இந்த மழை உதவும் எனகருதப்படுகிறது.
    இதேபோல், வலங்கைமான் பகுதியிலும் மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai