சுடச்சுட

  

  "பள்ளிகள் மூடும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு'

  By DIN  |   Published on : 06th June 2018 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் ஜூன் 9-ஆம் தேதி, பள்ளிகள் மூடும் திட்டத்தை கைவிடக் கோரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது. 
  திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜாக்டோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இதற்கான தீர்மானத்துடன் பிற தீர்மானங்கள். பங்களிப்பு ஓய்வூதிய முறையை  ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், 7 -ஆவது ஊதியக் குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை முற்றிலுமாக களைய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவுக்கான 21 மாத நிலுவைத் தொகையை  உடனடியாக வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
   பள்ளிக் கல்வித் துறையில் பணியிடங்கள் குறைப்பு என்ற பெயரால் ஆள்குறைப்பு என்ற அடிப்படையில் ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதை நிறுத்த வேண்டும், தொடக்கக் கல்வித் துறையை கலைத்து விட்டு,  பள்ளிக் கல்வியுடன் இணைத்து நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரால் குளறுபடி செய்து தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலன்கள் பாதிக்கும் வகையில் 1,600 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ சார்பில் ஜூன் 9-ஆம் தேதி  மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருவாரூர் ரயில் நிலையம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் ஆர். ஈவேரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் எஸ். துரைராஜ்,  மாவட்டச் செயலர் முருகவேல்,  தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முரளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வுப்பிரிவு மாவட்டச் செயலர் நா. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai