Enable Javscript for better performance
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 06th June 2018 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவாரூரில்...
    திருவாரூர்  பேருந்து  நிலையம் அருகே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஞானமோகன் தலைமை வகித்தார். 
    மாவட்டத் தலைவர்  வீராச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் புலிகேசி, நகரச் செயலர் மாரியப்பன், நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    திருத்துறைப்பூண்டியில்...
     திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் தலைமை வகித்தார். மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எம். வையாபுரி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஞானமோகன், மாநில நிர்வாகக் குழு  உறுப்பினர் ஜோசப், இந்திய கம்யூனிஸ்ட்  ஒன்றியச் செயலர்   பாஸ்கர், நகரச் செயலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இதேபோல், முத்துப்பேட்டை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் கே. முருகையன் தலைமை வகித்தார். 
    இதில் ஏஐடியுசி மாவட்டச் செயலர் சந்திரசேகர ஆசாத், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் குணசேகரன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    நன்னிலத்தில்...
    நன்னிலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் தீன. கெளதமன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அல்போன்ஸ், ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    இதேபோல், கொரடாச்சேரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் எஸ். கேசவராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் யு. பன்னீர்செல்வம், தங்கராசு, துரை. கதிர்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    மன்னார்குடியில்... 
    மன்னார்குடி மேல ராஜவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி தலைமை வகித்தார். நகரச் செயலர் வி. கலைச்செல்வம், ஒன்றியத் துணைச் செயலர் எஸ். ராகவன், மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை. அருள்ராஜன், விவசாயச் சங்க ஒன்றியச் செயலர் ஆர். சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     இதேபோல், கோட்டூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் கே. மாரிமுத்து தலைமை வகித்தார்.
     ஒன்றியத் துணைச் செயலர் எம். செந்தில்நாதன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் வீ. தங்கையன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் ஜெ. ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். 
    நீடாமங்கலத்தில்...
    நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான விவசாய சங்க நிர்வாகி மார்க்ஸ் தலைமை வகித்தார்.
    கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மணலி நேதாஜி, ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன், நிர்வாகி ஒளிமதி ராதா உள்ளிட்டோர் பங்கேற்று, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர். 
    இதேபால், ஆலங்குடி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் கே. தங்கமுத்து தலைமை வகித்தார். துணைச் செயலர் செந்தில்நாதன், விவசாய சங்க நிர்வாகி கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கூத்தாநல்லூரில்...
    கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எம். சுதர்ஸன் தலைமை வகித்தார். விவசாய சங்க நகரச் செயலர் கே. நாகராஜன், நகரத் தலைவர் வி. ரவி, நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராமாமிர்தம், ஆர். மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai