சுடச்சுட

  

  மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி பிரசார இயக்கம்

  By DIN  |   Published on : 06th June 2018 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஜூன் 8 முதல் 14-ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெற உள்ளது.
  திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.  
  மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் 8 முதல் 14 -ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு குழுக்களாக பிரசார இயக்கம் நடைபெற உள்ளது. கடலூரிலிருந்து மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் புறப்படும் குழுவினர் ஜூன் 13-ஆம் தேதி திருவாரூர் வருகின்றனர். இக்குழுவுக்கு திருவாரூர், மாவூர், கச்சனம், ஆலத்தம்பாடி,  மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல் பகுதிகளில் வரவேற்பு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. தமிழக மக்கள் மேடை அமைப்பாளராக ஜி. பழனிவேல், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளராக எம். சேகர், வழக்குரைஞர்களை கொண்ட மனித உரிமை குழுவின் அமைப்பாளராக கே.என். முருகானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், ஜூன் 25 முதல் 30-ஆம் தேதி வரை கட்சி உறுப்பினர்களுக்கான ரசீது வழங்கும் பேரவை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
  ஐ.வி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில குழு உறுப்பினர் வி. மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள், எம். சேகர், நா. பாலசுப்பிரமணியன், ஆர். குமாரராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai