சுடச்சுட

  

  திருவாரூர் அருகே மின்னல் தாக்கியதில், முதியவர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
  திருவாரூர் அருகேயுள்ள காவலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவத்தன் (60). இவர் கன்னிவாய்க்கால் பகுதியில் உள்ள தனது வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
  இதுகுறித்து கொரடாச்சேரி ஒன்றியம், மேலராதாநல்லுர் கிராம நிர்வாக அலுவலர் கயல்விழி அளித்த புகாரின் பேரில், கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai