Enable Javscript for better performance
ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மதுக்கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
    கோட்டூரை அடுத்த தெற்கு நாணலூரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (36). இவர் களப்பாலில் உள்ள மதுக்கடையில் மதுபுட்டிகளை வாங்கிவிட்டு, ரூ. 2 ஆயிரம் நோட்டைக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட கடை மேற்பார்வையாளர் ராஜசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில், காவல் சார்பு ஆய்வாளர் முரளிதரன், சோதனை செய்ததில் அது கள்ள ரூபாய் நோட்டு என்பது உறுதியானது. இதையடுத்து, அரிகிருஷ்ணனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai