சுடச்சுட

  

  விவசாயிகள் நலன் கருதி 12-இல் மேட்டூர் அணை திறக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 06th June 2018 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலன் கருதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நீடாமங்கலம் வட்ட 13-ஆவது பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நீடாமங்கலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு சங்க வட்டத் தலைவர் கே. இளமாறன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன், துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாவட்ட செயற்குழு உறுப்பினர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் வரவேற்றார். வட்டச் செயலாளர் கோ. கௌதமன் அறிக்கை வாசித்தார். வட்டப் பொருளாளர் ஆர். முத்துகிருஷ்ணன் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தார். அரசு ஊழியர்சங்க மாநிலச் செயலாளர் எம். சௌந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார்.
  தீர்மானங்கள்: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு  நிலுவையிலுள்ள 41 மாத ஊதியத்தை வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கணினி உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 
   நீடாமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன் கருதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, சங்கக் கொடியேற்றப்பட்டது.
  கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வி. சோமசுந்தரம், மாவட்டப் பொருளாளர் எம். மூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மணிகண்டன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai