Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம், காந்திஜி சாரணர் படை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பூ. திருமாறன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கச் செயலர் அ. முகமதுரபீக், ஆசிரியர் ஆ.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் சாரண ஆசிரியருமான பொ. சக்கரபாணி வரவேற்றார். 
    சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் நிலம், நீர், காற்று மாசுபடுதல், சுற்றுப்புறச் சூழல் தூய்மையின் அவசியம், புவி வெப்பமயாதல் குறித்து உடற்கல்வி இயக்குநர் கி. பாலமுருகன் மாணவர்களுக்கு விளக்கி பேசினார். காந்திஜி சாரணர் படை சார்பில் சுற்றுப்புற சூழலை விளக்கி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் நகர பகுதிகளில் வழங்கப்பட்டது. 
    நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் 100 பலா மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
    கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மரம் , செடி , பறவை , விலங்குகள் மற்றும் பூமித்தாயின் அனைத்து ஜீவராசிகள் மற்றும் நீர் நிலைகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமை வகித்தார். பேரணியை கட்டிமேடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் டி. நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல்முனாப், ஊராட்சி முன்னாள் தலைவர் ராம. ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியில், மாணவர்கள் பாலித்தீன் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு முழக்கமிட்ட படி சென்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai