Enable Javscript for better performance
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சங்க நிர்வாகி எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வருவாய் கிராம உதவியாளர் சங்க நிர்வாகி ராதா, வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி சின்னையன், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் கோ. கௌதமன் மற்றும் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai