சுடச்சுட

  

  உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தையொட்டி, மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
  என்எஸ்எஸ் சார்பில் பள்ளி வளாகத்தில்நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கூத்தாநல்லூர் அரசு கிளை நூலக அலுவலர் செல்வகுமார் பங்கேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாள் கொண்டாடப்படுவதின் நோக்கம், அவசியம், மரங்களின் முக்கியத்துவம், பிளாஸ்டிக்கினால் ஏற்பாடும் தீமைகளை குறித்து பேசினார். 
  இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்பணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டு, விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட என்எஸ்எஸ் தொடர்பு அலுவலர் என். ராஜப்பா, மாணவர் ஒருங்கிணைப்பாளர் ரிஷிபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  இதேபோல், ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் கிளைத் தலைவர் வி. அஞ்சறைப்பெட்டி ராஜேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் இலரா. பாரதிசெல்வம், ஜேசிஐ மண்டல இயக்குநர் டி. செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பள்ளியிலிருந்து தொடங்கி இளையோர் செஞ்சுலுவை சங்கம், பசுமைப்படை மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தலைமை ஆசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 
  பேரணி, காந்திஜிசாலை, பந்தலடி, பெரியக்கடைத் தெரு வழியாக வந்து  பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai