சுடச்சுட

    

    கண்ணில் கருப்புத் துணி கட்டி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 07th June 2018 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை கண்ணில் கருப்புத் துணி கட்டியவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    7-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 16-ஆம் நாளான புதன்கிழமை கண்ணில் கருப்புத் துணி கட்டி கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலராஜ வீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மன்னார்குடி அஞ்சல் உபக்கோட்டச் செயலர் எம். உதயக்குமார் தலைமை வகித்தார். 
    இதில், சிஐடியு நகரப் பொறுப்பாளர் கே. அகோரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் எஸ். ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க நிர்வாகி பி. தெட்சிணாமூர்த்தி, கிராம அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் ஆர். தமிழ்ச்செல்வன்,பொருளாளர் ஏ. பண்டரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai