சுடச்சுட

  

  காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கமல், ரஜினி இருவரும் செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறினார்.
  இதுகுறித்து திருவாரூரில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் 3 -ஆவது துணைக் குழுவுக்கு அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது. வருகிற ஜூன் 15 -ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சந்திக்க உள்ளார். ஆனால், ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க அமைச்சர்கள் கொண்ட குழுவை தில்லி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் காவிரி விவகாரம் தொடர்பாக தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக மக்களின் கருத்துக்கு எதிராக கமல்ஹாசன் பேசுவதும், அதற்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பதும் கண்டனத்துக்குரியது. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக கமல், ரஜினி இருவரும் செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.
  காலா திரைப்பட பிரச்னை காரணமாக காவிரியை ரஜினி கர்நாடகத்திடம் அடகு வைக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கூடாது என  கர்நாடகம் கூறுவதுபோன்று ரஜினி கூறினால் தமிழகத்தை விட்டு கர்நாடகத்துக்குச் சென்றுவிடலாம் என்றார் பி.ஆர். பாண்டியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai