சுடச்சுட

  

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசைப் பாராட்டி, மன்னார்குடியை அடுத்த கோட்டூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  கோட்டூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் பேட்டை சிவா தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திடும் வகையில், அரசிதழில் வெளியிட்ட  மத்திய அரசைப் பாராட்டி, டெல்டா மாவட்ட பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பது, மத்தியஅரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை விளக்கிடும் வகையில், மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரசாரக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலர்கள் வி.கே. செல்வம், ராவணன், கணேசன், தேசியப் பொதுக்குழு உறுப்பினர் ஞானம். ரவிச்சந்திரன், உதயகுமார், திருச்சி கோட்ட இணைப் பொறுப்பாளர் இல. கண்ணன், தஞ்சை கோட்ட இணைப் பொறுப்பாளர் சி.எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவ. காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai