Enable Javscript for better performance
கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    முதல்கட்டமாக தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டாட்சியர் செல்வி தலைமை  வகித்தார். இதில், தேர்தல் துணை  வட்டாட்சியர் வசுமதி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வி கூறியது:
    வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியை வரும் 15- ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். புதிய பெயர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை விரைந்து கவனிக்க வேண்டும் என்றார்.
    இதைத்தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டாட்சியர் செல்வி தலைமை வகித்தார். சமூகநலப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மலைமகள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வருவாய்  ஆய்வாளர்கள் கூத்தாநல்லூர் ராஜேஸ்வரி, கமலாபுரம் சத்யா, வடபாதிமங்கலம் அசோகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அதங்குடி ராஜசேகர், கூத்தாநல்லூர் ராசய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai