சுடச்சுட

  

  திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஜூன் 9-ஆம் தேதி முதல் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குகிறது என தெரிவித்துள்ளார் மேலாண்மை நிலைய முதல்வர் ஆர்.கே. செந்தமிழ்ச்செல்வி.
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சியில், தங்கம் குறித்த அடிப்படை அறிவு, தங்கத்தின் தரம் கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்து தரம் அறியும் முறை மற்றும் அழிக்காமல் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், நகைகள் செய்தல், ஹால்மார்க்கிங், அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்களை உள்ளடக்கி செயல்முறை பயிற்சியளிக்கப்படுகிறது. இத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படுகிறது. 
  இப்பயிற்சியை நிறைவு செய்பவர்கள் தேசிய வங்கிகள், வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், நகை அடகு கடை, ஆபரண கடை, நகை வணிகம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இப்பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், இளங்கலை, முதுகலை பட்டம் பெற கல்லூரிகளில் படித்து வருபவர்கள் தங்கள் படிப்புக்கு இடையூறு இல்லாமல் தமது தொழில்நுட்ப கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள இப்பயிற்சியில் சேரலாம்.
  பயிற்சி ஜூன் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதால், இதில் சேர விரும்புவோர் திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மார்பளவு புகைக்படம் மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பயிற்சியில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு முதல்வர், திருவாரூர், கூட்டுறவு மேலாண்மை நிலையம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், விளமல் என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம் அல்லது 04366-227233 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai