சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By DIN  |   Published on : 07th June 2018 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ரூ. 2 கோடியே 21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
  திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குள்பட்ட வடஆற்றங்கரை பகுதியில் ரூ. 2 கோடியே 17 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து திடக்கழிவு பணிகள் மேற்கொள்ள கிடங்குக்கு மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். பின்னர்,  நகராட்சிக்குள்பட்ட வேதாரண்யம் சாலையில் 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரிப்பதற்குரிய கிடங்கு சீரமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
  ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் நாகராஜன், வட்டாட்சியர் கே. மகேஸ்குமார், சுகாதார ஆய்வாளர் நா. வெங்கடாசலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai