சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை மகாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 
  திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் உள்ள அருள்மிகு துரைக்குடி மகாகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, கடந்த 15 தினங்களாக சுவாமி வீதியுலா காட்சியும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. 
  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்காண பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். 
  பின்னர், சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், மகா  தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாரம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம். முருகையன், கணக்கர் சீனிவாசன், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai