சுடச்சுட

    

    மதுபோதையில் பெண்ணிடம் தகராறு: தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்

    By DIN  |   Published on : 07th June 2018 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மதுபோதையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டவர்களைக் கண்டித்தவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 
    கோட்டூரை அடுத்த கோமளப்பேட்டையைச் சேர்ந்த கபிலன், நேதாஜி, பிரகாஷ் ஆகிய 3 பேரும் செவ்வாய்க்கிழமை மாலை மேலப்பனையூருக்குச் சென்றனர். அங்கு பிரதான வீதியில் உள்ள தேநீர்க் கடையில், தாங்கள் வாங்கி வந்த மதுவை அருந்த தண்ணீர் கேட்டனராம். அதற்கு கடையில் இருந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனராம்.
    பின்னர், மதுபோதையில் அங்கு வந்து, அதே பெண்ணிடம் மீண்டும் தகராறு செய்தனர். அப்போது, அருகில் இருந்த வளையல் கடைக்காரர் சுதாகர் (35), அவர்களைத் தட்டிக்கேட்டார். இதையடுத்து, சுதாகரை அவர்கள் தாக்கியதில் காயமடைந்த அவர், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சுதாகர் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
    இதுகுறித்து கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து, நேதாஜியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், இருவரை தேடி
    வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai