சுடச்சுட

    

    வேலைவாய்ப்பற்ற மாணவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 07th June 2018 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பற்ற மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    சங்க வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இளைஞர்களின் வேலைவாய்ப்பை  பறிக்கும் அரசாணை எண் 56 ஐ ரத்து செய்ய வேண்டும், ஆதிசேஷய்யா தலைமையில் அமைக்கப்பட்ட ஊழியர் விரோத குழுவை கலைக்க வேண்டும், அரசு காலிபணியிடங்களில் வேலைவாய்ப்பற்ற மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ். புஷ்பநாதன் சிறப்புரையாற்றினார். ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் டி. ராஜசேகரன், ஓய்வூதியர் சங்க வட்டச் செயலர் கருப்பையன், ஊராட்சி சங்கச் செயலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai