சுடச்சுட

  

  ஊதிய உயர்வு வழங்கக் கோரி திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
  ஊதிய உயர்வை வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் சேவையை முறையாகப் பராமரிக்க வேண்டும். வாகனங்களின் கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும். 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உபகரணங்களை முறையாகப் பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஐயப்பன் தலைமை வகித்தார். இதில், மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கர், தஞ்சை மாவட்டச் செயலர் சக்திவேல், நாகை மாவட்டத் தலைவர் சுப்பையன், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai