சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, துர்க்கையம்மன், சண்டிகேசுவரர், சனீஸ்வரபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai