Enable Javscript for better performance
உதயமார்த்தாண்டபுரம் ஏரி  சீரமைப்புப் பணி:  ஆட்சியர்ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    உதயமார்த்தாண்டபுரம் ஏரி  சீரமைப்புப் பணி:  ஆட்சியர்ஆய்வு

    By DIN  |   Published on : 08th June 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் ஏரியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
    உதயமார்த்தாண்டபுரம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணி ரூ.1.5 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது: முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட உதயமார்த்தாண்டபுரம் ஏரியின் நீர்வரத்து வாய்க்கால் 11 கி.மீட்டர் அளவுக்கு தூர்வாரப்படும். அத்துடன், ஏரியைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டுதல், 2 கி.மீட்டர் நீளத்துக்கு ஏரிக் கரைகளை உயர்த்தி சீரமைத்தல், 2 மதகுகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 1,020 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றார் ஆட்சியர். இந்த ஆய்வுப் பணியில், மாவட்ட ஆட்சியருடன் வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன், உதவி செயற்பொறியாளர் மூர்த்திராஜன், வட்டாட்சியர் கே. மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai