சுடச்சுட

  

  உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை

  By DIN  |   Published on : 08th June 2018 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த கோட்டூர் வேளாண்மை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் உளுந்து சாகுபடியில், மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மைத்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
  இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் முரளி, உதவி வேளாண்மை அலுவலர் அழகேசன் ஆகியோர் கூறியது:
  கோட்டூர் பகுதியில் வல்லூர், தென்பரை, திருமக்கோட்டை, பெருகவாழ்ந்தான், எளவனூர் ஆகிய பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், மழை பெய்யாததாலும், உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது.
   இதைக் கட்டுப்படுத்த நோய் தாக்கப்பட்ட செடிகளைக் கண்டறிந்து, அவற்றை வேருடன் அகற்றி அழிக்க வேண்டும். இந்த நோயைப் பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த குளோரி பைரிபாஸ் 50 இசி என்ற மருந்தை ஏக்கருக்கு 250 மில்லி., என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம் அல்லது பயர் ஒண்டர் டானிக் ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீருடன் 25-ஆவது நாள் மற்றும் 35-ஆவது நாள் என இரண்டு முறை தெளித்து நோய்களைக் கட்டுப்படுத்தி அதிக மகசூலைப் பெறலாம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai