சுடச்சுட

  

  தமிழ்நாடு கிராம ஊராட்சிப் பணியாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி) ஒன்றியக்கூட்டம் நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு முன்னாள் நிர்வாகி டேனியல் தலைமை வகித்தார். ஒன்றியத் துணைச் செயலாளர் ஏ. ரமேஷ் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டத் தலைவர் பி. சாந்தகுமார், மாவட்டச் செயலாளர் ஏ. தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
  தமிழக அரசு அறிவித்துள்ள மாத ஊதியம் ரூ.11,725 -ஐ மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குநர்களுக்கு 11.10.2017 முதல் வழங்கிட தமிழக அரசு அறிவித்தும், இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் அமல்படுத்தவில்லை. இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அமல்படுத்திட வேண்டும்.
  10.5.2000-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குநர்களுக்கு 5.7.2017 முதல் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கிட அரசு உத்தரவு பிறப்பித்தது. நீடாமங்கலம் ஒன்றியத்தில் இந்த உத்தரவு இன்னமும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. உடனடியாக அறிவிக்கப்பட்ட மாத ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை, அகவிலைப்படி ஆகியவற்றை கணக்கிட்டு வழங்கிட வேண்டும்.
  2013-ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த புதிய ஊதியம் ரூ.5,380 மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai