குக்கர் வெடித்து பெண் காயம்
By DIN | Published on : 08th June 2018 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மன்னார்குடி அருகே வியாழக்கிழமை சமையல் செய்தபோது குக்கர் வெடித்ததில் பெண் காயமடைந்தார்.
மேலவாசல் பேப்பர் மில் சாலையைச் சேர்ந்த பக்கிரிசாமி மனைவி நேருராணி(53). வியாழக்கிழமை சமையல் செய்து கொண்டிருந்தபோது, குக்கரை திறக்கையில் திடீரென பழுதடைந்து குக்கர் வெடித்தது. இதில் நேருராணி பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்
கின்றனர்.