சுடச்சுட

  

  சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால்,  இறந்தவரின் உடலை வயலில் சுமந்து செல்லும் அவலம்

  By DIN  |   Published on : 08th June 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சுடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லாததால், நடவு செய்யப்பட்ட வயல்களில் இறங்கி, இறந்தவரது உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
  குடவாசல் வட்டம், காங்கேய நகரம் ஊராட்சியில் உள்ள ஓலையமங்களம் கிராமத்தில் 65-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் சுடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லை. இதனால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
  இந்நிலையில், ஓலையமங்களம் காலனி தெருவில் வசித்து வந்த பேச்சிமுத்து (85) என்பவர், வயோதிகம் காரணமாக இறந்துவிட்டார்.  இதைத்தொடர்ந்து, நடவு செய்யப்பட்ட வயலில் இறங்கி அவரது உடல் ஊர்வலமாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
  இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால், கரடுமுரடான முள்கள் நிறைந்த பாதையிலும், வயல்வெளியாக சென்றும் அடக்கம் செய்து வருகிறோம். முதியவர் பேச்சிமுத்துவின் உடலைத் தூக்கிக்கொண்டு, சேற்றில் கால்கள் புதைய, புதையச் சென்றது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  எனவே, சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.
  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் நகரச் செயலாளர் லெட்சுமி கூறுகையில், இந்த பிரச்னையை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai