சுடச்சுட

  

  தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 08th June 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர்அருகே தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
  திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்குச் சொந்தமான சவ வண்டியை, ஒரு தரப்பினர் இறுதி ஊர்வலத்துக்கு கேட்டதாகவும், ஆனால், தேவாலய நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 10 நாள்களாக இரு தரப்பினரிடையே தகராறு இருந்து வந்தது.
   இந்நிலையில், ஒரு தரப்பினர் தேவாலயத்தினுள் புதன்கிழமை புகுந்து, அங்குள்ள பொருள்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
  இதனால், பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, தேவாலயத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai