Enable Javscript for better performance
நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 08th June 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலக நாளேடு, தன்பதிவேடு, நபார்டு பணிகள் பதிவேடு,  ஊழியர் வருகைப் பதிவேடு, சொத்து வரிவிதிப்புப் பதிவேடு, அஞ்சல் வில்லைப் பதிவேடு, உள்ளூர் தபால் பதிவேடு, காசோலை பதிவேடு, இருப்புப் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டதுடன், தினசரி துப்புரவுப் பணி மேற்கொள்ளும் பணியாளர்களின் ஊதியப் பதிவேட்டையும் ஆய்வு 
    செய்தார்.
    பேரூராட்சியில் குப்பைகள் தேங்கா வண்ணம் தினசரி துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும்,  பொது கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும்,  மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை முறைப்படுத்தி, தினசரி தடையின்றி வழங்க வேண்டும் எனவும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
    ஆய்வின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஸ்வநாதன்,  செயல் அலுவலர் சிவகுமார்,  வட்டாட்சியர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai