சுடச்சுட

  

  திருவாரூர் அருகே வீட்டுக்குள் புகுந்து, பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
  மாவூரில் உள்ள பழைய சித்தாறு பாலத்தை உடைத்தபோது அதில் உள்ள செங்கல்லை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது மாவூர், அண்ணாநகரைச் சேர்ந்த மேரி (34), அவரது சகோதரி ராஜவள்ளி (38) ஆகியோர் செங்கல்லை எடுத்தபோது,  அதற்கு அனுமதிக்கவில்லையாம். இதனால், இருவரும் அங்குள்ளவர்களை திட்டினார்களாம். 
  அப்போது, அவ்வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த சார்லஸ் (33) என்பவர் தன்னைத் தான் திட்டுவதாக நினைத்து, கடந்த செவ்வாய்க்கிழமை மேரி வீட்டுக்குள் புகுந்து, அங்குள்ள பெண்களை மானபங்கம் செய்ய முயன்றதோடு, அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம். 
  இதுகுறித்து மேரி அளித்த புகாரின் பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து சார்லஸை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai