சுடச்சுட

    

    பேரளம் அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தை புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
     திருவாரூர் அருகேயுள்ள இஞ்சிக்குடி, ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (46). இவரது மகன் ராஜேஷ் (24).   கடந்த செவ்வாய்க்கிழமை மோகன் குடிபோதையில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ராஜேஷ், வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வருவதாகக் கூறி கண்டித்தாராம். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மோகன், அரிவாளால் ராஜேஷை வெட்டினாராம். தலையின் பின்புறம் வெட்டுக் காயம் பட்ட ராஜேஷ், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, ராஜேஷின் மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில், பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai