சுடச்சுட

  

  மன்னார்குடி அருகே அனுமதியின்றி வீட்டில் வைத்து, டாஸ்மாக் மதுபுட்டிகளை விற்பனை செய்த 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
  வடுவூரை அடுத்த எடமேலையூர், எடகீழையூர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபுட்டிகளை வாங்கி வந்து,  வீடுகளில் இருப்பு வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பதாக வடுவூர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.
  இதையடுத்து, போலீஸார் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் எடமேலையூர் தெற்குகண்டியன் தெரு தெ. ராமலிங்கம்(49) வீட்டிலிருந்து 10 மதுபுட்டிகளும், எடகீழையூர் தெற்குத்தெரு சா. அழகேசன் (43) வீட்டிலிருந்து 10 மதுபுட்டிகளும் கைப்பற்றப்பட்டன.
  இதுதொடர்பாக, ராமலிங்கம், அழகேசன் ஆகியோரை வடுவூர் போலீஸார் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai