சுடச்சுட

    

    பேரளம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    பேரளம் அருகேயுள்ள செருவளூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகையன் மகன் குமரய்யன் (55). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டு கொல்லைப் புறத்திலிருந்த புளிய மரத்தில் ஏறி புளி பறித்தப்போது, தவறி விழுந்து விட்டாராம். அவருக்கு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
    இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி குமரய்யன் புதன்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து, பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai