சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகர் கழகச் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு வர்த்தகர் சங்கத் தலைவர் மெட்ரோ மாலிக் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கே.வி. கண்ணன் வரவேற்றார். பொதுச் செயலாளர் இரா. ராஜாராம் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் மு. முகைதீன் பிச்சை வரவு- செலவு கணக்கை சமர்ப்பித்தார்.
  கூட்டத்தில் சங்கச் செயல்பாடுகள், இந்த ஆண்டுக்கான சந்தா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன.
  மேலும், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி, அரசின் நலத்திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்கும் பொருட்டு, தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக அவர்களைச் சேர்க்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது, வர்த்தகர் கழகத்தின் சார்பில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது, புதிய பேருந்து நிலையத்தில் கால அட்டவணை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai