Enable Javscript for better performance
வலங்கைமான் வட்ட அரசு ஊழியர் சங்கப் பேரவைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வலங்கைமான் வட்டப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு வட்டத் தலைவர் வி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.புஷ்பநாதன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் ஜி. மனோகரன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் தெ. ராஜசேகரன் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். மாவட்டச் செயலாளர் வி. சோமசுந்தரம் தொடக்க உரையாற்றினார். வட்டத் துணைத் தலைவர் கே. மாரியப்பன், வட்ட இணைச் செயலர் ஜி. மாயகிருஷ்ணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். 
    வட்ட இணைச் செயலர் வி. சிவகுமார் தீர்மானங்களை வழிமொழிந்தார். மாநில செயலாளர் எம். சௌந்தர்ராஜன் சிறப்புரையாற்றினார். சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன், மாவட்டப் பொருளாளர் எம். மூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் ஏ. தனபால் உள்ளிட்டோர் பேசினர். பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திட வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 8-ஆவது ஊதியக்குழுவில் நிலவும் குறைபாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. சுகுமார் வரவேற்றார். ஊராட்சிச் செயலர் கே. ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai